Categories
மாநில செய்திகள்

ஓய்வு பெற்ற ஆசிரியர் தொடர்ந்து வழக்கு…. பள்ளிக் கல்வித் துறை ஆணையருக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஒரே மாதிரியான ஊதியம் நிர்ணயம் செய்து 1993 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசு அணையை கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவின்படி பண பலன்கள் வழங்கவில்லை என ஹரிஹரன் என்ற ஓய்வு பெற்ற ஆசிரியர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு, பணப்பலன் வழங்காதது குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க பள்ளி கல்வித்துறை ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் இன்று நேரில் ஆஜர் ஆனார். அப்போது அரசு தரப்பில், ஓய்வு பெற்ற ஆசிரியர் ஹரிஹரனுக்கு ஓய்வூதி கணக்கிட்டு வழங்குவது குறித்து நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து உத்தரவு பிறப்பித்தால் மட்டும் போதாது என தெரிவித்த நீதிபதிகள், பணம் எப்போது மனுதாரருக்கு வழங்கப்படும் என கேள்வி எழுப்பினர். இருவரங்கள் பணம் மனுதாரரின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கு விசாரணை நவம்பர் 1ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். இதற்கிடையில் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் மனுதாரர் மிரட்டுவதாக அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் புகார் தெரிவித்துள்ளார். இது தீவிரமானது என தெரிவித்த நீதிபதிகள், இது குறித்து விசாரணை நடத்தி குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை ஆணையருக்கு உத்தரவிட்டார்.

Categories

Tech |