Categories
உலக செய்திகள்

“ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள்” உலக வங்கியின் திடீர் எச்சரிக்கை…. காரணம் என்ன….?

உலக பொருளாதாரமானது மிகவும் ஆபத்தான நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக உலக வங்கியின் தலைவர் டேவிட் மால் பாஸ் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், உலக பொருளாதாரமானது ஆபத்தான, மந்தமான வளர்ச்சி நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. இதனால் நிச்சயமாக பொருளாதார வீழ்ச்சி ஏற்படும். வளரும் நாடுகளில் நிலைமை என்னும் மோசமாகலாம். இதன் காரணமாக வளரும் நாடுகளில் உள்ள ஏழை மக்கள் மிகுந்த சிரமத்திற்கும், பாதிப்புக்கும் ஆளாகின்றனர்.

இது உலக வங்கிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. இந்நிலையில் சில நாடுகளில் ஏற்கனவே வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளதால் மேற்கொண்டு அதிகரிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அனைத்து நாடுகளும் கண்டிப்பாக ஏழை ,எளிய மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். மேலும் ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்தால்தான் அவர்கள் பொருளாதார மந்த நிலையில் இருந்து தப்பிக்க முடியும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |