Categories
சினிமா தமிழ் சினிமா

பொன்னியின் செல்வன்: வந்தியத்தேவன் கெட்டப்பில் ரஜினிகாந்த்…. வெளியான வைரல் புகைப்படம்….!!!!

சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்துள்ள படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து இருந்தனர். இவற்றில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரங்கள் நந்தினி, வந்தியத்தேவன் என அவரே கூறி இருந்தார். மேலும் கதையை படித்து முடித்ததும் வந்தியதேவனாக நடிக்கவேண்டும் என தான் விரும்பியதாகவும் ரஜினி கூறினார்.

அதேபோன்று கமல்ஹாசன் பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க முயற்சி செய்தபோதும், ரஜினிகாந்தை வந்தியதேவனாக போடச் சொல்லி கமலிடம் சிவாஜி கூறினார். இதன் காரணமாக ரஜினிகாந்த் வந்தியதேவனாக நடித்து இருந்தால் எப்படி இருக்கும் என நினைத்து, ரசிகர்கள் பலரும் கற்பனை செய்து புகைப்படம் ஒன்றை வடிவமைத்து, அதனை வைரலாக்கி வருகின்றனர்.

Categories

Tech |