நியூ அயர்லாந்தில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.
பப்புவா நியூ கினியாவிற்கு அருகில் அமைந்துள்ள நியூ அயர்லாந்து பிராந்தியத்தில் நிலநடுக்கம் திடீரென ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியுள்ளது என ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கமானது 100 கிமீ (62.14 மைல்) ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.