நாட்டின் வளர்ச்சியில் சரக்கு கையாளுகை மிகவும் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. தொழிற்சாலைக்கு தேவையான மூலப்பொருட்களை வேளாண் நிலங்களில் இருந்தும் வனப்பகுதிகளிலிருந்தும் கொண்டு செல்லப்படுகிறது. தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்ட பொருளானது விற்பனைக்காக சந்தைகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது. மூலப்பொருளானது மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாறி வாடிக்கையாளர்களின் கைகளில் சேர்வதில் போக்குவரத்து மிக முக்கிய பங்கை வகித்து வருகிறது. இந்த நிலையில் பொருட்கள் ஒரே இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு துரிதமாக எடுத்துச் செல்லப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது.
அதில் ஏற்படும் தாமதமானது பொருட்களின் உற்பத்தியில் தாமதத்தை ஏற்படுத்தி பொருளாதார வளர்ச்சியை பாதிக்கின்றது. அதனால் தான் சரக்கு கையாளுகைக்கு அரசுகள் முக்கியத்துவம் அளித்து போக்குவரத்து சார்ந்த திட்டங்களை துரிதமாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. சாகர்மாலா திட்டம், பாரத் மாதா திட்டம், தங்க நாற்கரசாலை திட்டம், சரக்கு ரயில்களுக்கான தனி வழித்தடம் திட்டம் போன்ற பல சரக்குகளை கொண்டு செல்லும் நேரத்தை குறைப்பதற்காகவே அமல்படுத்தப்படுகின்றது. இந்த நிலையில் சரக்குகளை கையாள்வதில் மாநிலங்கள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை வருடம் தோறும் ஆராய்ந்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் நடபாண்டிற்கான அறிக்கை வியாழக்கிழமை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ள முக்கிய தகவல்கள் சரக்கு கையாளுகையில் மாநிலங்களின் நிலை பிரிவுகள் சாதனையாளர்கள், வேகமாக வளர்ப்பவர்கள், வளர்ப்பவர்கள் நிலத்தால் சூழப்பட்ட மாநிலங்கள் ஹரியானா, ஹிமாச்சல், பஞ்சாப், தெலுங்கானா, உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம், சத்தீஸ்கர், பீகார், ராஜஸ்தான், ஜார்கண்ட், கடற்கரையோர மாநிலங்கள், தமிழகம் ஆந்திரம், கர்நாடக மகாராஷ்டிரம், ஒடிசா, குஜராத், கோவா, மேற்குவங்கம், அசாம், சிக்கிம், வடகிழக்கு மாநிலங்கள், திரிபுரா, அருணாச்சல பிரதேஷ், மணிப்பூர், மேகாலய, மிசோரம், நாகலாந்து, சண்டிகர், புதுச்சேரி, தில்லி, யூனியன் பிரதேசங்கள், அந்தமான் நிக்கோபார் தீவுகள், டாமன் டையு & தாத்ரா நகர், ஹவேலி, ஜம்மு ,காஷ்மீர் , லடாக், லட்சதீவுகள் சரக்கு கையாளுகையில் மாநிலங்களின் திறன் சாதனையாளர்கள் 90 முதல் 100 சதவீதம்.