வி.ஜே மகேஸ்வரி “பிக் பாஸ் 6” சீசனில் போட்டியாளராக கலக்கி கொண்டிருக்கின்றார்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய “அசத்தப்போவது யாரு” என்ற நிகழ்ச்சியின் மூலமாக வி.ஜே மகேஸ்வரி தொகுப்பாளினியாக அறிமுகமானார். பின்னர் அதன் மூலம் இசையருவி, சன் மியூசிக் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக அவர் பணியாற்றி வந்துள்ளார். இதற்கிடையில் வி.ஜே மகேஸ்வரிக்கு திருமணமானது. எனவே அவர் குழந்தை, குடும்பம் என்று பிசியாகிவிட்டார்.
இதனை தொடர்ந்து சிறிது இடைவெளி எடுத்துக் கொண்ட பிறகு, மீண்டும் அவர் தன்னுடைய கெரியரை தொடங்கியுள்ளார். மீண்டும் சீரியலில் களம் இறங்கிய வி.ஜே மகேஸ்வரி புதுக்கவிதை, தாயுமானவன் போன்ற ஒரு சில சீரியல்களில் நடித்தார். மேலும் மந்திரப்புன்னகை, குயில் மற்றும் சென்னை 28 போன்ற படங்களிலும் அவர் நடித்திருக்கின்றார். இதனை அடுத்து ஜீ தமிழில் தொகுப்பாளினியாக வேலை பார்த்து வந்த அவர் பல நிகழ்ச்சிகளை கலகலப்பாக தொகுத்து வழங்கி மீண்டும் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
மேலும் பியார் பிரேமா காதல் படத்தில் ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் உடன் இணைந்து நடித்த வி.ஜே மகேஸ்வரி இந்த படத்தின் மூலமாக காஸ்ட்யூம் டிசைனராக அவதாரம் எடுத்துள்ளார். பின்னர் சமீபகாலமாக இணையதளத்தில் கவர்ச்சியான போட்டோ ஷூட் களை நடத்தி புகைப்படம் போடுவதை வழக்கமாகக் கொண்டு இருந்துள்ளார். அந்த போட்டோஸ் இணையதளத்தில் வைரலாகி வருகின்றது. இந்நிலையில், தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “பிக் பாஸ் 6” சீசனில் 20 போட்டியாளர்களில் ஒருவராக வி.ஜே மகேஸ்வரியும் பங்கேற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.