இணைத்தளத்தில் தினசரி எண்ணிலடங்கா வீடியோக்கள் பகிரப்பட்டாலும் அதில், சில வீடியோக்கள்தான் ரசிகர்களின் ஆதரவை பெறுகிறது. அந்த அடிப்படையில் தற்போது புலிக்குட்டியுடன் ஆட்டம்போடும் மனித குரங்கு குட்டியின் வீடியோ வெளியாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இயற்கை மற்றும் விலங்குகளின் அழகை ரசிப்பது கூட நம் மனதை அமைதிப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி டென்ஷனைக் குறைக்கிறது.
அதிலும் குறிப்பாக குட்டி விலங்குகளைப் பார்ப்பதும், அவற்றின் குறும்புகளை ரசிப்பதும் உங்களது இதயத்தை லேசாக்கிவிடும். இந்நிலையில் சிம்பன்ஸி எனும் மனித குரங்கு ஒன்று 2 புலிக் குட்டிகளுடன் விளையாடும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்தால் உங்கள் டென்ஷன் நிச்சயம் காணாமல் போய்விடும். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி லைக்குகளை குவித்து வருகிறது.