சரியான காப்பீட்டு திட்டத்தை தேர்ந்தெடுப்பதன் மூலம் எதிர்பாராத சிரமங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க முடிகிறது. பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் கட்டாயம் இது போன்ற திட்டங்களை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் அது அவர்களின் எதிர்காலத்தை சிறப்பானதாக அமைக்கிறது. அதே போல் பெண் குழந்தைகளுக்கான பாலிசியை தேர்ந்தெடுக்கும் போது சரியான காப்பீட்டு நிறுவனத்தை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியமாகும். பெண் குழந்தையின் எதிர்கால செலவு அது படிப்பு அல்லது திருமணம் எதுவாக இருந்தாலும் அதனை சிறப்பாக மாற்றும் கடமை பெற்றோருக்கு இருக்கின்றது.
அதனால் தான் இந்தியாவின் மிகச்சிறந்த காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி பெண் குழந்தைகளுக்கான சில சிறந்த எல்ஐசி பாலிசிகளை செயல்பாட்டில் வைத்திருக்கின்றது. அதாவது பெற்றோர் இருந்தால் குழந்தையின் பள்ளி கட்டணத்தை செலுத்துவதற்கும் குழந்தையின் கல்வியை முடிப்பதற்கும் இது உதவுகிறது. மேலும் இதன் மூலமாக பெண்கள் உயர்கல்வி எந்த சூழ்நிலையிலும் தொடரலாம் எதிர்காலத்தில் திருமணம் போன்ற பிற முயற்சிகளை எடுக்கும் போதும் மொத்த பணத்தை வழங்குவதால் இந்த திட்டம் மிகவும் உதவியாக இருக்கிறது. மேலும் இந்த திட்டத்தில் விண்ணப்பதாரர் பல்வேறு கூடுதல் சலுகைகளுடன் நேராக மொத்த தொகையை பெரும் முறையையும் செய்து கொள்ளலாம்.
இந்த காப்பீட்டில்கடன் வாங்குவது சாத்தியமாகும் எல்ஐசி ஜீவன் தரும் என்பது பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி இருவராலும் பெறக்கூடிய ஒரு பாலிசி ஆகும். இதில் உங்களது பெண் குழந்தையின் எதிர்கால தேவைகளுக்கு உதவும் பாதுகாப்பதற்கும் பல அம்சங்கள் இருக்கிறது. அதிலும் குறிப்பாக உங்கள் குழந்தையின் கல்வி மற்றும் எதிர்கால பாதுகாப்பிற்கு உதவுவதாக உருவாக்கப்பட்டது இந்த திட்டம் வளரும் குழந்தையின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்கின்றது. மேலும் இது பிரீமியம் அம்சத்தை கொண்டிருக்கிறது முதிர்வு தொகை 10(10D) வரி இல்லாதது 80cயின் கீழ் வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. பாலிசி தொடங்கப்பட்டதிலிருந்து இரண்டு வருடங்கள் அல்லது குழந்தை எட்டு வயதை எட்டும் போது அந்த பெண் குழந்தைக்கு டிரஸ் கவரேஜ் கிடைக்கிறது.
பெற்றோரின் மரணத்தின் போது செலுத்தப்பட்ட அனைத்து பிரமியங்களிலும் 15% அல்லது மொத்த காப்பீட்டில் 125 சதவிகிதம் பெற்றுக் கொள்ளலாம். பாலிசி குறைந்தபட்ச காப்பீடு திட்ட தொகையானது 75,000 மற்றும் அதிகபட்ச காப்பீடு தொகை கட்டுப்பாடு இல்லை குறைந்தபட்ச நுழைவு வயது குழந்தைகளின் பிறந்து 90 நாட்கள் முதல் 12 வயது வரை. பிரீமியம் செலுத்தும் காலம்: குறைந்தபட்சம் எட்டு வருடங்கள் மற்றும் அதிகபட்சம் 20 வருடங்கள் ஆகும் இருப்பினும் ஐந்து வயது குழந்தை விஷயத்தில் 15 வருடங்கள் வரை செலுத்தலாம் கூடுதல் விவரங்களுக்கு எல்ஐசி ஜீவன் தரும் பாலிசி பற்றி ஆன்லைனில் செக் செய்து கொள்ளவும்.