Categories
மாநில செய்திகள்

5வது வந்தே பாரத் ரெயில்…. சென்னையிலிருந்து எப்போது தெரியுமா….? வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தை அறிமுகம் செய்த 18 மாதங்களுக்குப் பிறகு வந்தே பாரத் ரயில் திட்டம் 100 கோடியில் உருவாக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 2019 ஆம் வருடம் ஜூன் மாதம் முதல் வந்தே பாரத் ரயிலின் தொடக்க ஓட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து டெல்லி முதல் வாரணாசி வரை ,டெல்லி முதல் கத்ரா வரை என இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் மூன்றாவது வந்தே பாரத் ரயிலை கடந்த மே மாதம் 30 ஆம் தேதி முதல் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து தற்போது நான்காவது வந்தே பாரத் ரயில் ஓட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்நிலையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய நாட்டின் 5வது வந்தே பாரத் ரெயில் , நவம்பர் 10 முதல், சென்னையிலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து புறப்படும் வந்தே பாரத் ரெயில் பெங்களுரு வழியாக மைசூர் சென்றடைகிறது. இந்த சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |