இமாச்சல் பிரதேசத்தில் நவம்பர் 12ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இமாச்சலப்பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனு மீதான பரிசீலனை அக்டோபர் 27 நடக்கும். வேட்பு மனு தாக்கல் நிறைவு அக்டோபர் 25, தேர்தல் மனுவை திரும்ப பெற கடைசி நாள் அக்டோபர் 29. பதிவான வாக்குகள் டிசம்பர் 8ஆம் தேதி எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Categories