தீபாவளி பண்டிகை வரும் 24 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்துள்ளது. சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ் தொகையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத்தொகை என மொத்தம் 10 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சி மற்றும் டி பிரிவில் யார் எல்லாம் வருவார்கள் என்பதை பற்றி பார்ப்போம்: தமிழக அரசுக்கு சொந்தமான அரசு போக்குவரத்து கழகங்கள், மின்சார வாரியம், ஆவின், டாஸ்மாக், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், கூட்டுறவு பஞ்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள்.