அமெரிக்க நாட்டில் வசிக்கும் இந்திய புலம்பெயர் தமிழரான சிதல்சிங் என்பவரின் மகனுக்கும் மருமகளுக்கும் அடிக்கடி வாக்குவாதம் நடைபெற்று வந்துள்ளது. இந்த வாக்குவாதத்தில் மருமகள், சிதல்சிங்கின் மகனை விவாகரத்து செய்யப் போவதாக கூறியுள்ளார். இதை கேட்ட சிதல்சிங், மருமகளை சமாதானப்படுத்தி இருக்கிறார். எனினும் மருமகள் கேட்கவில்லை.
இதன் காரணமாக கோபரமடைந்த சிதல்சிங், துப்பாக்கியை எடுத்து மருமகளை சுட்டுக் கொலைசெய்தார். அதன்பின் சிதல்சிங் காவல்துறையினரால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். முதற் கட்ட விசாரணையில் தனது மகனை மருமகள் விவாகரத்து செய்வதாக தெரிவித்து இருந்ததால் ஆத்திரத்தில் சுட்டுக்கொலை செய்ததாக கூறியுள்ளார்.