சென்னை அருகில் உள்ள ஆதம்பாக்கம் ராஜா காவலர் குடியிருப்பு பகுதியில் மாணிக்கம்(47) என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி வரலட்சுமி(43). இவர் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியின் மகள் சத்யா(20). இவர் தியாகராயர் நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் தயாளன் மகன் சதீஷ்(23). இவர் சத்யாவை ஒருதலையாக காதலித்து வந்தார். சதீஷ் சத்யாவிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியும், தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் சத்யா அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில் சத்யா நேற்று வழக்கம்போல் கல்லூரி செல்வதற்கு பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு வந்தார். அங்கு நின்று கொண்டிருந்த சதீஷ் சத்யாவை வழிமறித்து தகராறு செய்துள்ளார்.
அப்போது தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி சென்று கொண்ட மின்சார ரயில் முன்பு திடீரென சத்யாவை தள்ளிவிட்டார். ரயிலில் சீக்கிய சத்தியா உடல் நசங்கி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் சதிஷை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் சதீஷ் ஓடிவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சத்யாவின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தப்பி ஓடிய சதீஷை தனிப்படை அமைத்து போலீசார் தேடிக் கொண்டே இருந்தனர். துரைப்பாக்கத்தில் தலைமறைவாக என்ன சதீஷை கைது செய்தனர். காவல் துறையினர் நடத்திய விசாரணையில் சதீஷ் கூறியது, சத்யாவை நான் 2 ஆண்டுகளாக காதலித்து வருகிறேன். ஆனால் சத்யா என்னுடைய காதலை ஏற்கவில்லை. தொடர்ந்து என் காதலை இருக்குமாறு வற்புறுத்தினேன். சத்தியா மனம் மாறுவார் என்று எண்ணினேன்.
இருப்பினும் என் காதலை ஏற்கவில்லை. சத்தியாவை என்னால் மறக்க முடியவில்லை. இதனையடுத்து சத்யாவை கொலை செய்ய திட்டமிட்டேன். தினமும் பரங்கிமலை ரயில் நிலையத்தில் இருந்து தான் சத்திய கல்லூரிக்கு செல்வார். இதனால் அங்கு வைத்து ரயிலில் தள்ளிவிட்டு கொன்றுவிடலாம் என்று முடிவு செய்தேன். இதற்காக நேற்று மதியம் பரங்கிமலை ரயில் நிலையத்தில் முன் கூட்டியே சென்று காத்திருந்தேன். பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு சத்யா தனது தோழியுடன் வந்ததை பார்த்தது அவரது அருகில் சென்று பேசினேன். அவள் என்னை மதிக்காத வகையில் நடந்து கொண்டார். எனக்கும் கிடைக்காத சத்தியா வேறு யாரையும் திருமணம் செய்து கொண்டு வாழக்கூடாது என்ற எண்ணத்தில் ஓடும் ரயிலில் சத்யாவை தள்ளிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டேன் என்று அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் காவல்துறையினர் சதீஷிடம் வாக்குமூலத்தை பெற்று பதிவு செய்துள்ளனர். விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சதீஷை சிறையில் அடைத்தனர்.