விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி ஆறாவது சீசன் கடந்த வாரம் தொடங்கியது. முதல் நாளிலிருந்து பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு பல டாஸ்க்குகளை கொடுத்து வருகிறது.இன்னும் ஒரு வாரம் கூட முடிவடையாத நிலையில் பல பிரச்சனைகள் மற்றும் பஞ்சாயத்துக்கள் என பிக் பாஸ் வீட்டில் நடந்து கொண்டிருக்கின்றன.அதிலும் குறிப்பாக ஜிபி முத்து மற்றும் தனலட்சுமி இடையே உச்சகட்ட பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது.வயதிற்கு கூட மரியாதை தராமல் பேசுவதாக தனலட்சுமியை ஜிபி முத்துவின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வறுத்தெடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த வாரத்தில் சிறப்பாக செயல்பட்ட போட்டியாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என பிக் பாஸ் கூறிய நிலையில் பலரும் சமையல் டிப்ஸ் சாந்தி மற்றும் அனைத்து டீமிற்கும் உதவி செய்த ஜி பி முத்துவை தேர்வு செய்துள்ளனர்.ஜி பி முத்து சிறந்த போட்டியாளராக தேர்வாண நிலையில் வெள்ளை வேட்டி சட்டை போட்டதற்கு இன்று மரியாதை கிடைத்து இருக்கிறது என தெரிவித்துள்ளார். அந்த ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.