நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் நடப்பு கல்வி ஆண்டு முதல் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.இதனிடையே மணிப்பூர் மாநில அரசு ஆசிரியர்களுக்கு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் பள்ளிகளில் பணியாற்றுவதை தாண்டி மற்ற நேரங்களில் தனியார் கல்வி நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்கள்.
அதே சமயம் மாலை நேரங்களில் அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலர் தாங்களாகவே வீட்டில் அல்லது டியூஷன் சென்டரில் டியூஷன் நடத்தி வருகிறார்கள். வேறு சில தனியார் கல்வி நிறுவனங்களுக்கு பாடம் கற்பித்து வருகிறார்கள்.இந்நிலையில் மணிப்பூர் மாநில அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.