Categories
சினிமா

பிக் பாஸ்: முதலில் வெளியேறப்போகும் நபர் இவரா?…. லீக்கான தகவல்….!!!!

விறுவிறுப்புக்கும், சண்டைக்கும் பஞ்சமின்றி பிக்பாஸ்-6 நடைபெற்று வருகிறது. இவற்றில் ஜி.பி. முத்து, அசல் கோலார், ஆயீஷா, அசீம், மகேஸ்வரி, அமுதவாணன், தனலட்சுமி உட்பட 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். முதல்வாரமே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அதற்குள்  பிக்பாஸ் வீட்டை விட்டு முதல் ஆளாக வெளியேற போவது யார் என்ற சலசலப்பு தொடங்கிவிட்டது. ஏற்கனவே அடுத்த வாரத்துக்கான நேரடி நாமினேஷனில், ஆயீஷா, விக்ரமன், அசீம் இருக்கின்றனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டைவிட்டு முதல் நபராக தனலட்சுமி வெளியேறுவார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். ஏனெனில் நேற்று ஜி.பி. முத்துவை பார்த்தாலே காண்டாகுது என்று தனலட்சுமி தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ஜிபி முத்து ரசிகர்கள் பலரும் அடுத்தவார எலிமினேஷனில் தனலட்சுமி சிக்கினால் கண்டிப்பாக அவர்தான் முதல் நபராக வீட்டிலிருந்து வெளியேறுவார் என்று கூறி வருகிறார்கள்.

Categories

Tech |