தமிழகத்தில் பிஇ பிடெக் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியுள்ளது. சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 18 முதல் 22ஆம் தேதி வரை நடத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பொது பிரிவினருக்கான முதல் சுற்று கலந்தாய்வில் பொதுப்பிரிவு தொழில் பிரிவு, அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு செப்டம்பர் 10 முதல் 15ஆம் தேதி வரை நடைபெற்றுள்ளது. அதனை தொடர்ந்து இரண்டாம் சுற்று கலந்தாய்வு செப்டம்பர் 25ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 13-ஆம் தேதி வரை நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் இரண்டாம் சுற்று கலந்தாய்வில் பங்கேற்க தகுதியான 31,95 பேரில் 24 ஆயிரத்து 430 பேர் பங்கேற்று கல்லூரிகளை தேர்வு செய்து இருக்கின்றனர். இதனை அடுத்து இரண்டு சுற்றுகள் கலந்தாய்வு முடிந்திருக்கின்ற நிலையில் தமிழகத்தில் 323 கல்லூரிகளில் இதுவரை 10 சதவிகித இடங்கள் கூட நிரப்பப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. இதனை அடுத்து இரண்டாம் கட்ட கலந்தாய்வு முடிவில் 12 கல்லூரிகளில் மட்டுமே 90 சதவீத இடங்கள் நிரம்பி இருக்கிறது. 50 சதவீதத்திற்கும் அதிகமான இடங்கள் நிரம்பியுள்ள கல்லூரிகளின் எண்ணிக்கை வெறும் 48 மட்டுமே 80 கல்லூரிகளில் ஒருவர் கூட சேரவில்லை.
இந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை தொடங்கிய மூன்றாவது குழு கவுன்சிலிங் 49,43 மாணவர்கள் பங்கேற்க தகுதி பெற்று இருக்கின்றார்கள் அடுத்த இரண்டு சுற்றுகளில் காலியாக உள்ள 1,11,511 இடங்களுக்குள் 1,10, 701 மாணவர்கள் கவுன்சிலிங் பங்கேற்பார்கள் என தெரிகின்றது. இருப்பினும் நடபாண்டில் 65,000 இடங்கள் காலியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இரண்டு சுற்றுகளையும் சிவில் மெக்கானிக் இன்ஜினியரிங் தேர்வு மிகவும் குறைவாக இருப்பதாகவும் கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி, செயற்கை நுண்ணறிவு, எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு மாணவர்கள் முன்னுரிமை தருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சமீப காலமாக பொறியியல் படிப்பு மிதமான ஆர்வம் மக்களிடையே குறைந்திருப்பது கல்வி வளர்ச்சியில் எதிர்மறையாக பார்க்கப்படுகிறது.