சென்ற சில தினங்களுக்கு முன் நாட்டில் 5G சேவையை பிரதமர் மோடி துவங்கி வைத்தார். இந்தநிலையில் 3G, 5G, 4G ஸ்மார்ட் போன் தயாரிப்பதை நிறுவனங்கள் நிறுத்தவேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியது. இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்து இருக்கிறது. இதையடுத்து மத்திய அரசு, அதுபோன்று எந்த உத்தரவும் வழங்கவில்லை என விளக்கம் அளித்துள்ளது.
டெல்லியில் மத்திய தொலைத்தொடர்பு செயலாளர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முக்கிய செல்போன் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவன பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இவற்றில் 5G அதி வேக இணையதள சேவைக்காக மேம்படுத்தப்பட்ட மென் பொருள் அப்டேட் விரைவில் வெளியிடுவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.