Categories
தேசிய செய்திகள்

பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணமா?…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!

ரயிலில் பயணச்சீட்டு இல்லாத பயணிகளுக்கு 1 மாதம் ஜெயில் தண்டனை விதித்து உடுப்பி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.

மத்ஸ்யகந்தா விரைவு இரயிலில் பொதுப்பெட்டியில் பயணித்த இளைஞர்கள் 5 பேர் மங்களூருவிலிருந்து மட்கானுக்கு பயணச்சீட்டு இன்றி பயணம் செய்ததாக ரயில்வே காவல்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து பயணச் சீட்டு பற்றி டிடிஇஆர் விசாரித்தபோது, அந்த 5 இளைஞர்களும் அலட்சியமாக நடந்து கொண்டதோடு, இடையூறு ஏற்படுத்தினர். இதுகுறித்து டிடிஇஆர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பின் ரயில்வே பாதுகாப்புப் படை(ஆபிஎப்) ஊழியர்கள், சம்பவ இடத்திற்கு வந்து இளைஞர்களைப் பிடித்து வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.  பயணச்சீட்டு இன்றி பயணம் செய்தவர்களுக்கு தலா 1 மாதம் சிறைத்தண்டனையும், தலா ரூபாய்.1000 அபராதமும், இடையூறு ஏற்படுத்தியதற்காக தலா ரூபாய்.100 அபராதமும் விதித்து உடுப்பி நீதிமன்றமானது தீர்ப்பளித்தது.

Categories

Tech |