Categories
மாநில செய்திகள்

ஓபிஎஸ் மகன் மீது புகார்…… சபாநாயகருக்குக் கடிதம்…. வெளியான பரபரப்பு தகவல்…..!!!!

ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி எம்பியுமான ரவீந்திரநாத் மீது வழக்குப்பதிவு செய்வதற்கு மக்களவை சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டு இருப்பதாக மாவட்ட வனத்துறை அலுவலர் தகவல் தெரிவித்து இருக்கிறார். தேனியில் உள்ள ரவீந்திரநாத்தின் தோட்டத்தில் சிறுத்தை ஒன்று உயிரிழந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்ய திமுக வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் வன அலுவலர் இதனை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் புகார் மனுவை பெற்றுக்கொண்ட வனஅலுவலர் சமர்தா கூறியதாவது “சிறுத்தை இறந்த இடமானது எம்.பி ரவீந்திரநாத் உள்பட 3 நபர்கள் பெயரில் இருக்கிறது.

தோட்ட உரிமையாளர்கள் பெயர்களை வருவாய் துறையினரிடமிருந்து பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்-க்கு சொந்தமான இடம் என்பதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்வதற்கு பல்வேறு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். வழக்குப்பதிவு செய்வதற்காக நாடாளுமன்ற சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டு இருப்தாகவும், முறையான தகவல் வந்த பின்பு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Categories

Tech |