மனைவியை கொலை செய்த வியாபாரிக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் கருமத்துறை பகுதியில் தங்கவேல் வெள்ளச்சி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். தங்கவேல் தனது மனைவி மாற்றுத்திறனாளி வெள்ளச்சியுடன் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆனைக்காடு பகுதியில் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு குடியேறியுள்ளார். அங்க அவர்கள் மர வியாபாரம் செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் தங்கவேல் நடத்தி வந்த மர வியாபாரத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதனால் தங்கவேல் தனது மனைவி வெள்ளச்சியிடம் பெற்றோர் வீட்டிற்கு சென்று நகை, பணம் வாங்கி வரும்படி துன்புறுத்தி உள்ளார். மேலும் கடந்த 2015 ஆம் ஆண்டு கணவன் மனைவிக்கு இடையே கடும் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த சண்டையில் வெள்ளச்சியை தங்கவேல் அடித்துக் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வெள்ளச்சியின் அண்ணனான அண்ணாமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் தங்கவேல் மீது கொலை வழக்கு பதிந்து அவரை கைது செய்து விழுப்புரம் மகளிர் கோட்டில் ஆஜர் படுத்தியுள்ளனர். இந்த நிலையில் வழக்கின் சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளியான தங்கவேலுக்காக ஆயுள் தண்டனையும் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். இதனை அடுத்து தங்கவேல் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.