Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கெட்டுப்போன மீன்கள் விற்பனையா….? ஆய்வு நடத்திய அதிகாரிகளுக்கு….. காத்திருந்த அதிர்ச்சி….!!!!

விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள கிருஷ்ணன் கோவிலுக்கு அருகில் மீன் மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டில் உள்ள கடைகளில் கெட்டுப்போன மீன்கள் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலின் பேரில் உணவு பாதுகாப்பு துறையைச் சேர்ந்த மாவட்ட அதிகாரி செல்வராஜ் மற்றும் இயக்குனர் ராஜேந்திரன் உணவு பாதுகாப்பு அலுவலர் சந்திரசேகரன், அபுதாகிர் மற்றும் அதிகாரிகள் பல விரைந்து வந்து மீன் மார்க்கெட்டை சோதனை செய்துள்ளனர். இந்த சோதனையில் 26 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இனியும் கெட்டுப்போன மீன்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துச் சென்றுள்ளனர்.

Categories

Tech |