சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் என்ற சீரியலில் ஆனந்தி கதாபாத்திரத்தில் அபிநவ்யா நடித்து வருகிறார். இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான திருமணம் என்ற சீரியலின் மூலம் பிரபலமான நடிகர் தீபக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீப காலமாகவே சீரியலில் அபிநவ்யாவை சரிவர பார்க்க முடியவில்லை.
அதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. அதாவது அபிநவ்யா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இது தொடர்பான தகவலை அபிநவ்யா மற்றும் தீபக் புகைப்படத்துடன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் சின்னத்திரை ஜோடிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.