வெங்கட் பிரபு – நாக சைதன்யாவின் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த்சாமி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகிவுள்ளது.
“மாநாடு” திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்புக்கு பின் இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது தெலுங்கில் நாக சைதன்யா நடிக்கும் திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இந்த திரைப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றனர். இந்தத் திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த விவரங்களை தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்கிரீன் அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இந்த திரைப்படத்தில் பிரேம்ஜி, சம்பத்ராஜ், பிரியாமணி மற்றும் வெண்ணிலா கிஷோர் போன்றவர்கள் நடிப்பதாக தகவல் வெளியாகிவுள்ளது.
தற்போது இந்த திரைப்படத்தில் சரத்குமார் மற்றும் அரவிந்த்சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகிவுள்ளது. இதனை தொடர்ந்து “மாநாடு” திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாபாத்திரத்திற்கு முதலில் அரவிந்த்சாமி நடிக்கவிருந்தார். ஆனால் “மாநாடு” திரைப்படத்தின் படப்பிடிப்பு தாமதமானதால் அரவிந்த் சாமியால் நடிக்க முடியவில்லை எனவே அவருக்கு பதிலாக எஸ். ஜே. சூர்யா நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.