12 மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணையில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை அணை இந்த ஆண்டில் 2-வது முறையாக நிரம்பி உள்ளது. இதனால் கண் மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கடலூர், ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வருவாய்த் துறையினர், பொதுப்பணி துறையினர் மற்றும் போலீசார் இணைந்து பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.