Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திய வாலிபர்…. தாயின் பரபரப்பு புகார்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருக்கோகர்ணம் பகுதியில் சிங்கமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை காதலித்துள்ளார். இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சிறுமியிடம் சிங்கமுத்து வற்புறுத்தியுள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் புதுக்கோட்டை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் சிங்கமுத்துவை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் சிங்கமுத்துவுக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதமும், மூன்று வருடங்கள் ஜெயில் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.

Categories

Tech |