விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. கடந்த 9-ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 6 விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிக்டாக் பிரபலம் ஜி.பி முத்து, சரவணன் மீனாட்சி புகழ் ரச்சிதா மகாலட்சுமி, தனலட்சுமி, நிவ்வா, குயின்சி, மகேஸ்வரி சாணக்கியன், அமுதவாணன், விக்ரமன், சாந்தி, ஜனனி, ஏடிகே, ராம் ராமசாமி, மணிகண்டன், ராஜேஷ், செரீனா, ஆயிஷா, ராபர்ட் மாஸ்டர், அசீம், ஷிவின் கணேசன், அசல் கொலார் ஆகியோர் போட்டியாளர்களாக களம் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி முதல் நாளில் இருந்தே டிஆர்பி ரேட்டிங்கில் நல்ல நிலையில் இருக்கிறது. ஏனெனில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போகப்போக தான் சண்டை வரும். ஆனால் தற்போது டிக்டாக் பிரபலம் ஜிபி முத்து மற்றும் தனலட்சுமி இடையே முதல் நாளிலிருந்தே மோதல் தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஜிபி முத்துவுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருப்பதால், தனலட்சுமியை பலரும் இணையதளத்தில் வெளுத்து வாங்குகின்றனர். அதன்பிறகு ஆயிஷா, தனலட்சுமி மற்றும் ஜி.பி முத்து அகியோருக்கு இடையே நடைபெற்ற வாக்குவாதத்தின் போது, தனலட்சுமி ஜிபி முத்துவை பார்த்து ஓவரா நடிக்காதீங்க என்று திட்டினார்.
இதனால் ஜி.பி முத்து நான் வேணா அந்த பொண்ணு கால்ல விழுறே என்றெல்லாம் கூறி மிகவும் உருக்கமாக பேச அவரை சக போட்டியாளர்கள் சமாதானப்படுத்தினர். ஜி.பி முத்து ஒருபுறம் உருக்கமாக பேச, தனலட்சுமியோ கேமரா முன்பாக நின்று கொண்டு ஜி.பி முத்துவை பார்த்தாலே ரொம்ப கடுப்பாக இருக்கு என்று கோபமாக கூறியுள்ளார். இது தொடர்பான ப்ரோமோ வெளியான நிலையில், ரசிகர்கள் பலரும் தனலட்சுமி பார்த்து விஷக்கிருமி என்று திட்டி தீர்க்கின்றனர். மேலும் தனலட்சுமியை கிண்டல் செய்து இணையதளத்தில் பல்வேறு விதமான மீம்ஸ்களும் பரவி வருகிறது.