இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் “வாரிசு” திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் “வாரிசு” திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகின்றார். மேலும் இந்த திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ், குஷ்பூ, சரத்குமார், ஷாம் மற்றும் யோகி பாபு போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த மாத இறுதிக்குள் இதன் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் எனக் கூறப்படுகின்றது. மேலும் “வாரிசு” திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் பதிவு ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. இதனை அடுத்து “வாரிசு” திரைப்படத்தில் விஜய்யின் மாஸ் லெவல் நடனம் ஒன்று இருப்பதாகவும் இதை பார்த்தால் திரையரங்குகளில் யாரும் உட்கார்ந்து படம் பார்க்கமாட்டீர்கள் என்றும் ஜானி மாஸ்டர் கூறினார். மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பதிவை விஜய் ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து விஜய்யின் “பீஸ்ட்” திரைப்படத்தின் அரப்பிக்குத்து பாடலின் நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.