ட்ரம்ப்புக்கு வழங்கப்பட்ட இரவு உணவில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் பங்கேற்றார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது குடும்பத்துடன் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று முற்பகல் 11.45 மணியளவில் தனி விமானம் மூலம் குஜராத்தின் அஹமதாபாத் நகருக்கு வந்த ட்ரம்பை நேரில் வரவேற்றார் பிரதமர் நரேந்திர மோடி. நேற்றும் இன்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட அதிபர் ட்ரம்ப்பின் பயணம் இன்றோடு முடிவடைகின்றது.
நேற்று காந்தியின் சபர்மதி ஆசிரமம் சென்ற ட்ரம்ப் அங்குள்ள காந்தியின் நினைவுகளை பார்வையிட்டார். அதை தொடர்ந்து அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்று , மாலை தாஜ்மாஹாலை சுற்றி பார்த்ததோடு முதல்நாள் பயணத்தை நிறைவு செய்தார்.
இரண்டாம் நாளான இன்று குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற அணிவகுப்பை ஏற்ற ட்ரம்ப் காந்தி சமாதியில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து அங்குள்ள பெங்களூர் ஹவுஸ்சில் பேச்சுவார்த்தை , ஒப்பந்தம் மேற்கொண்ட மோடி – ட்ரம்ப் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அதனை தொடர்ந்து அமெரிக்கா தூதரகத்தில் தொழிலதிபருடன் ஆலோசனை நடத்திய ட்ரம்ப் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தி இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டார். அமெரிக்க அதிபர் ட்ரம்பை வரவேற்று வழியனுப்பும் வகையில் குடியசுத்தலைவர் மாளிகையில் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் அதிபர் ட்ரம்ப்புடன் வந்த அதிகாரிகள் அனைவரும் பங்கேற்றனர். அதே போல பிரதமர் மோடி , குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனர். மேலும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானும் பங்கேற்றார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு ஏ ஆர் ரகுமான் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.