தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி மாணவர்கள் மத்தியில் கற்றல் இடைவெளி அதிகரித்த நிலையில் அதனை கட்டுப்படுத்தும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகின்றது.அதனைப் போலவே மத்திய அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு வகையான நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் சிறுபான்மை இன மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை வழங்கி வருகின்றது.
இது தொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது நடப்புக் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும், மத்திய மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் பயிலும் சீக்கியர், புத்த மதத்தினர், இஸ்லாமியர், கிறிஸ்தவர், ஜெயின் மற்றும் பார்சி உள்ளிட்ட மதங்களை சேர்ந்த மாணவ மாணவிகள் மத்திய அரசின் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். ஒன்னு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் ஆராய்ச்சி படிப்பை பயிலும் மாணவர்களும் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
இதற்கு விண்ணப்பிக்க தேவையான வழிமுறைகளும் மத்திய அரசு தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. பள்ளிப்படிப்பின் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வருகின்ற அக்டோபர் 15ஆம் தேதி என்றும் பள்ளி மேற்படிப்புக்கான உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதியும் கால அவகாசம் முடிவடைய உள்ளது. எனவே அதற்குள் கல்வி உதவித்தொகை பெற அனைத்து மாணவர்களும் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.