இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் அகலவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.நடப்பு ஆண்டு முதல் காலாண்டில் மூன்று சதவீதம் உயர்த்தப்பட்டு 34 சதவீதமாக வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது நான்கு சதவீத மகள விலை பணியை உயர்த்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது .இந்நிலையில் ஊழியர்களின் நலனை கருதி மத்திய அரசு ஊழியர்களின் அகலவிலைப்படி உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில் அகலவிலைப்படி உயர்த்தப்படலாம் என தகவல் வெளியானது.அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகலவிலைப்படி நான்கு சதவீதம் அதிகரிக்கப்பட்டு 38 சதவீதமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படி 15 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஐந்தாவது ஊதிய குழுவின் படி ஊதியம் பெறும் ஊழியர்களுக்கான DA,அடிப்படை ஊதியத்தில் 381 சதவீதத்திலிருந்து 396 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது ஜூலை 1ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு அமல்படுத்தப்படும். இம்மாதம் தொடக்கத்தில் ஏழாவது ஊதிய குழுவின் படி சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு நான்கு சதவீதம் அகலவிலைப்படையை உயர்த்தி மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.