பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி நகையை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கயம் ராக்கிபாளையம் பிரிவு செந்தில் நகர் மூன்றாவது தெருவை சேர்ந்த செல்வநாயகம் என்பவரின் மனைவி உமையம்மாள். இவர் நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் வீட்டில் அருகே இருக்கும் விநாயகர் கோவிலுக்கு சென்றார். அவர் வீதியில் நடந்து வந்து கொண்டிருந்தபோது இவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று மர்ம ஆசாமிகள் திடீரென அவரிடம் கத்தியை காட்டி மிரட்டினார்கள்.
பின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி ஆறு பவுன் நகையை பறித்து சென்றார்கள். பின் மூன்று மர்ம ஆசாமிகளும் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்கள். இதையடுத்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பிறகு போலீசார் விசாரணை செய்வதற்காக சம்பவ இடத்திற்கு வந்து அங்கு பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் நகையை பறித்து சென்றது தெரியவந்தது. இதன்பின் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றார்கள்.