Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏன்டா..! விடியுதுனு C.M புலம்புறாரு…! 2024இல் தேர்தல் வருது… பாஜக வீபரீத முடிவு எடுக்காது…!!

செய்தியாளர்களிடம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கோயம்புத்தூரில் குண்டு வெடிப்பு  என்பது எல்லோரையும் அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிற விஷயம். அதனால் அமைச்சர் அவர்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதுதான் எல்லோருடைய எண்ணமும் அதான். தமிழகத்தில் சட்டம்  ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. போதை கலாச்சாரம் பெருகி கொண்டிருக்கின்றது.

விடியல் ஆட்சி  தருகின்றோம் என்று சொல்லிட்டு,  முதல்வரே ஏன்டா விடியது என்று பொலம்புற அளவுக்கு தான் இன்னைக்கு நிலைமை இருக்கு. இதே நிலை நீடித்தால் நிச்சயம் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்பது தான் உண்மை. தமிழ்நாட்டுல தமிழ் தான் தாய்மொழி. எந்த மாநிலத்திலும் தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கணும். தாய்மொழி கல்வி அவசியம் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம்.

அதுபோல தமிழ்நாட்டில எந்த காரணத்தை கொண்டும் எந்த மொழியையும் தமிழ்நாட்டு மக்கள் விரும்பி தான் ஏற்றுக் கொள்கிறார்களே தவிர..  திணிப்பை விரும்ப மாட்டார்கள். அதனால இது போன்ற பிரச்சனைகளில்,  ஆளுங்கட்சிகள் ஈடுபடாமல்…  தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றி தர வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை. ஹிந்தியை எப்படி அவங்க ( மத்திய பாஜக ) திணிப்பாங்க.

2024ல பாராளுமன்ற தேர்தல் வர இருக்கின்றது. ஒரு கட்சி தமிழ்நாட்டில் வெற்றி பெற வேண்டும் தான் நினைப்பார்கள். ஏற்கனவே கடந்த காலங்களில் 65களில் ஹிந்தி திணிப்பு என்கின்ற காரணத்தால் தான் காங்கிரஸ் ஆட்சி போனது. இன்றைக்கு வரைக்கும் அந்த ஆட்சி வரவிடாமல் போனதற்கு ஹிந்தி திணிப்பு முயற்சி தான். அதனால இது  போன்ற விபரீத முயற்சியில் மத்திய அரசு  எடுபடாது என்பதுதான் எனது கருத்து என தெரிவித்தார்.

Categories

Tech |