சரக்கு லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 17 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் இருந்து நேற்று அதிகாலை 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை வெங்கடேசன் என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் மகுடஞ்சாவடி மேம்பால பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து முன்னால் சென்ற சரக்கு லாரிமீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் பேருந்து ஓட்டுனர், கண்டக்டர் உள்பட 17 பேர் காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பகுதி செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.