தமிழகத்தின் உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது, பாரதிதாசன் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம் போன்றவைகளில் மட்டும்தான் தமிழ் பாடங்கள் இருக்கிறது. இது தவிர மற்ற பல்கலைக்கழகங்களில் B.COM, BBA, BCA உள்ளிட்ட படிப்புகளில் 2-ம் ஆண்டில் தமிழ் பாடம் இடம்பெறவில்லை.
எனவே மேற்கண்ட 3 படிப்புகளிலும் 2-ம் ஆண்டிலிருந்து தமிழ் பாடங்கள் இடம் பெற வேண்டும். இந்நிலையில் மேற்கண்ட மூன்று படிப்புகளிலும் முதலாம் ஆண்டில் தமிழ் பாடங்கள் இருப்பதால் இனி வரும் செமஸ்டர் தேர்வில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் அறிமுகப்படுத்த வேண்டும். மேலும் இந்த உத்தரவை கண்டிப்பாக அனைத்து பல்கலைக்கழகங்களும் பின்பற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.