உதவி வருவாய் அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சியில் சாரங்க சரவணன் என்பவர் உதவி வருவாய் அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இவர் மீது ஏராளமான புகார்கள் உயர் அதிகாரிகளுக்கு வந்தது. அதன்படி உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி சரவணனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றினர். நேற்று சரவணனை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் அதிரடியாக உத்தரவிட்டனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது, சரவணன் மீது எழுந்த புகார்களின் அடிப்படையில் அவர் மீது துணை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.