Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மருத்துவத்துறையில் வேலை கிடைக்கும்….. 4 லட்ச ரூபாய் மோசடி செய்த நபர்…. தந்தையின் பரபரப்பு புகார்….!!!

4 லட்ச ரூபாய் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒருவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள சம்பத் நகர் பகுதியில் ரங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனது மகன் மாணிக்கராஜ் டிப்ளமோ படித்துவிட்டு வேலைக்காக காத்திருந்தார். எனக்கு அறிமுகமான கரும்பறை புதூர் பகுதியை சேர்ந்த ஒருவர் மருத்துவத்துறையில் செல்வாக்கு உள்ளதாக கூறி எனது மகனுக்கு மருத்துவ பணியாளர் பணி வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறினார்.

அதனை நம்பி அவரிடம் 4,20,000 ரூபாயை கொடுத்தேன். ஆனால் கூறியபடி அவர் வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதற்கு அவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |