மதுரை பழங்காநத்தம் பகுதியில் குடிவாரி கணக்கு நடத்த கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கனமழைக்கு நடுவே நடைபெற்ற இந்த கூட்டத்தில் மழையும் பொருட்படுத்தாமல் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சியினருடன் மழையில் நனைந்தபடி அமர்ந்திருந்தார். இதனையடுத்து மேடையில் பேசிய அவர், குடிவாரி கணக்கெடுப்புதான் சாதி ஒழிப்பிற்கான முயற்சி. குடிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் சமூக நீதி குறித்து பேசக்கூடாது. தமிழக அரசு குடிவாரி கணக்கெடுத்து கல்வி, வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும்.
அதனை தொடர்ந்து ஈடு இணையற்ற இசைஞானி இளையராஜா தலித் என்பதற்காக அவருக்கு எம்.பி. பதவி கொடுத்துள்ளனர். இதனை இளையராஜா தூக்கி எறிந்து இருக்க வேண்டும். மத்திய அரசு நீட் தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்து விட்டது. அவரவர் தாய்மொழியில் பேசுகின்றனர். நாம் மொழிகளுக்கே தாயான தமிழ் மொழியில் பேசுகிறோம். இந்த நாடு இளைஞர்கள் போதை மாத்திரைகளுக்கும், மது போதைகளுக்கு அடிமையாகி வைத்துவிட்டது. மேலும் ராஜராஜ சோழன் காலத்தில் இந்தியாவும் இல்லை, இந்து மதமும் இல்லை வரலாற்று ராஜராஜ சோழன் சைவ மரபினர் என்றே உள்ளது. மேலும் வீரர் சைவரான எங்களை ஏன் இந்து என மதம் மாற்றுகிறீர்கள்?என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.