Categories
மாநில செய்திகள்

“மாணவி சத்யா மரணத்தால் நொறுங்கிப் போய் உள்ளேன்”…. வேதனை தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்….!!!

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு கல்லூரி மாணவி சத்யாவை தள்ளிவிட்டு சதீஷ் என்ற இளைஞர் படுகொலை செய்துள்ளார். மகளை இழந்த சோகத்தில் மன அழுத்தத்தில் இருந்து அவர் தந்தை மாணிக்கம் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் ஏழு தனிப்படைகள் அமைத்து ஈசிஆர் பகுதியில் சுற்றித்திரிந்து சதிஸை கைது செய்துள்ளனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மாணவி சத்யாவுக்கு நடந்த துயரத்தை அறிந்த நான் நொருங்கி போய் இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டை புது கல்லூரியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையில் சார்பில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இரண்டு நாளைக்கு முன்னால் சென்னையில் சத்யா என்ற மாணவிக்கு நடந்த துயரத்தை அறிந்த நான் நொறுங்கிப் போயிருக்கிறேன். நான் மட்டுமல்ல, அதை படித்து அறிந்த அத்தனை பேர்களும் நீங்கள் எல்லாம் துக்கத்தில் இருந்திருப்பீர்கள், துயரத்தை அடைந்திருப்பீர்கள். இதுபோன்ற சம்பவங்கள் இனி தமிழகத்தில் நிகழக்கூடாது.

இதுவல்ல நாம் காண விரும்பக்கூடிய சமூகம் இனி இந்த எந்த பெண்ணுக்கும் இது போல நடக்காமல் தடுக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அதனை தொடர்ந்து தங்கள் பிள்ளைகள் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அறிவாற்றலிலும் தனித்திறமையிலும் சமூக நோக்கம், மனப்பான்மை கொண்டவர்களாக அவர்களை பெற்றோர்கள் வளர்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து பேசியவர் பாடப்புத்தகத்தில் கல்வி மட்டும் இல்ல சமூக கல்வி அவசியமானது. தன்னை போலவே பிற உயிரையும் மதிக்க பாதுகாக்க கற்று தரவேண்டும். நல்லொழுக்கமும் பண்பு கொண்டவர்களாக அவர்களது வளர்ந்து வாழ்ந்து இந்த சமூகத்துக்கான தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும். அவர்கள் எந்த வகையிலும் திசை மாறி சென்று விடாதபடி வளர்க்க வேண்டிய பெரும் பொறுப்பு பெற்றோருக்கு தான் இருக்கிறது. மேலும் இயற்கையில் ஆண் வலிமை ஆக இருக்கலாம். ஆனால் அந்த வலிமை அடுத்தவர்களை கட்டுப்படுத்துவதாக இருக்கக் கூடாது பெண்களை பாதுகாக்க கூடியதாக அந்த வலிமை இருக்க வேண்டும். சில இளைஞர்கள் என்ன மாதிரியாக வளர்கிறார்கள் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது. பள்ளி, கல்லூரிகளும், பெற்றோர்களும் சேர்ந்து இளைய சக்திகளை பாதுகாக்க அவர்களை எல்லாம் வளர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories

Tech |