விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி 5 சீசன்களை கடந்து விட்ட நிலையில் தற்போது ஆறாவது சீசன் தொடங்கியுள்ளது. 20 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர். இதில் அனைவருக்கும் பிடித்த போட்டியாளராக ஜி பி முத்து இருக்கிறார். தூத்துக்குடி தமிழில் இவர் பேசும் டயலாக்குகள் பல மீம் மெட்டீரியலாகவும் மாறியுள்ளன.
மேலும் போட்டியாளர்களுக்கு இடையே தற்போது சிறிய சிறிய சண்டைகள் ஏற்பட்டு பிக்பாஸ் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் நடிகை ஆயிஷா, தனது காதலன் யார் என்பதை முதல் முறையாக வெளிப்படுத்தியுள்ளார். சக போட்டியாளரான தனலட்சுமியிடம், “நான் யோகேஸ்வரன் என்பவரை 3 ஆண்டுகளாக காதலித்து வருகிறேன். அவர்கள் வீட்டில் ஓகே தான், எங்கள் வீட்டில்தான் இன்னும் சம்மதம் வரவில்லை” என்று கூறியுள்ளார். இதை சீரியல் நடிகர் விஷ்ணுவிஜய் ஸ்கிரீன்ஷாட் எடுத்து, தன் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். விஷ்ணுவும், ஆயிஷாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில் அவர் இப்படி கூறியுள்ளார்.