ஈரோடு மாவட்டத்தில் உள்ள திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. இந்த மலைப்பாதையில் தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பரம் ஏற்றுக்கொண்டு தாளவாடியில் இருந்து மினிலாரி சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டு இருந்தது. இந்நிலையில் மலைப்பாதையில் 25-ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே ஓட்டுநர் வாகனத்தை திருப்பியுள்ளார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பிவிட்டார். ஆனால் லாரியில் இருந்த கரும்புகள் சாலையில் சிதறியதால் மலை பாதையின் இருபுறங்களிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதனை அடுத்து கிரேன் மூலம் லாரியை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.