Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு… கோபத்தை குறைத்து கொள்ளுங்கள்.. அன்பாக பேசுங்கள்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று கோபத்தை அடக்கி அனைவரிடமும் பணிவுடன் நடப்பது நல்லது. மௌனமே கோபத்திற்கு மருந்து, எனவே வாய் திறக்காமல் இருப்பது ரொம்ப சிறப்பு. இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பதவி உயர்வு, நிலுவைத் தொகை வருவதில் தாமதம் ஏற்படும். ஏதாவது பிரச்சினைகள் தலை தூக்கி கொண்டே தான் இருக்கும்.

கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதங்கள் ஏற்படலாம் பார்த்துப் பேசுங்கள். கூடு மாணவரிடம் கொஞ்சம் அன்பாகவே நடந்து கொள்ளுங்கள். பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது ரொம்ப நல்லது. இன்று மாணவர்களுக்கு கல்வியில் சிறு தடைகள் ஏற்படும். தடையை தாண்டி தான் முன்னேறி செல்ல வேண்டியிருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே ந நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் இளம் மஞ்சள் நிறம்

Categories

Tech |