கஜகஸ்தான் நாட்டில் ஆறாவது உச்சி மாநாடு நடைபெற்று வருகின்றது. இந்த மாநாடு ஆசியாவில் தொடர்பு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்கான மாநாடு ஆகும். இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதன் கலந்து கொண்டு பேசியுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது “ஆசியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு சவால்களில் ஒன்றாக ஆப்கானிஸ்தான் உள்ளது. மேலும் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் அதன் பிராந்தியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பு ஆகியவற்றின் வளங்களை பயன்படுத்திதான் நாட்டின் நிலைமையை சீராக்க முடியும்.
அது மட்டுமல்லாமல் நெருக்கமான ஒத்துழைப்பு இருக்க அனைத்து ஆசிய நாடுகளையும் நான் அழைக்கிறேன். இதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கையகப்படுத்திய பின் அமெரிக்கா அங்கிருந்து வெளியேறியது கண்டிக்கத்தக்க ஒன்றாகும்” என்று அவர் கூறியுள்ளார்.