Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அமுல் பால் விலை உயர்வு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு நாடு முழுவதும் அமுல் என்ற பெயரில் பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. குஜராத் தவிர அனைத்து மாநிலங்களிலுமே முழு கொழுப்பு நிறைந்த பால் மற்றும் எருமை பால் ஆகியவற்றின் விலையை லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்த்தியுள்ளது. இதனால் முழு கொழுப்பு நிறைந்த பால் லிட்டருக்கு 61 ரூபாயிலிருந்து 63 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து குஜராத் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனர் கூறுகையில், கால்நடை தீவன செலவு கடந்த வருடத்தை விட 20 சதவீதம் உயர்ந்துள்ளது. செயல்பாட்டு செலவும் மற்றும் பால் உற்பத்திக்கான செலவு அதிகரித்திருப்பதை கருத்தில் கொண்டு இந்த விலை உயர்வு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |