Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக சரித்திரத்தில் இப்படி நடந்தது இல்ல…. முதல் முதலாக நடத்திக்காட்டிய பாஜக… மிரண்டு போன தமிழக கட்சிகள்…!!

தமிழக பாஜக நடத்திய போராட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் அண்ணாமலை, திமுக திராவிட முன்னேற்றக் கழக கட்சி தமிழ் மொழியை வளர்க்கவில்லை அழித்து கொண்டிருக்கிறது என்று எங்கேயும் போராட்டம் நடந்ததாக சரித்திரம் கிடையாது. முதன் முதலாக பாரதிய ஜனதா கட்சியின் இன்றைக்கு இந்த போராட்டத்தை முன்னெடுத்து இருக்கிறது, தமிழகத்தில் 6௦ இடத்தில் இதே நேரத்தில் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.  தமிழகம் முழுவதும் தலைவர்கள் ஒரு ஒரு பகுதியிலும் இந்த  போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

நம் தாய் மொழியாம்,  தமிழுக்கு முடிவுரை எழுத முயற்சிக்கும் திறனற்ற திமுக அரசை கண்டித்து இந்த போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. நிறைய நண்பர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்..  கடந்த ஒரு வாரமாக எதற்கு இந்த போராட்டம் ? எதற்காக திமுகவை எதிர்த்து போராட்டம் ?  திமுக அப்படி தமிழுக்கு என்ன தீங்கு செய்திருக்கிறது ? என்று  நிறைய மக்களுக்கு இது ஆச்சரியமாக கூட இருக்கும்.

இந்த போராட்டத்திற்கான முக்கிய நோக்கமே, அந்த அனைத்து விஷயங்களையும் மக்கள் மன்றத்தில் பாரதிய ஜனதா கட்சி எடுத்து வைக்க வேண்டும். மக்களுக்கு திமுகவினுடைய சதித்திட்டத்தை அம்பலப்படுத்த வேண்டும், நாக்கிலே ஒரு பேச்சு,  உள்ளத்திலே ஒரு எண்ணம் என்று இருக்கக்கூடிய திமுகவின் உடைய மனநிலையை கோடிட்டு காட்ட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த போராட்டம். அதுவும் கடலூரில் இந்த போராட்டத்தில் நானும் பங்கேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி என தெரிவித்தார்.

Categories

Tech |