தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் புஷ்பா படத்தில் ஓ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இருப்பார். இந்தப் பாடலும் சமந்தாவின் நடனமும் சூப்பர் ஹிட் ஆன நிலையில் பாலிவுட் சினிமாவில் சமந்தாவுக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணமாக இருக்கிறது. இந்நிலையில் நடிகை சமந்தா நடிப்பில் அண்மையில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள யசோதா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்தும் படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
அதாவது படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைவதற்குள் சமந்தா 2 மாதங்கள் அமெரிக்காவுக்கு சென்று விட்டார். அதன் பிறகு நடிகை சமந்தாவின் பெரும்பாலான படங்களுக்கு பிரபல பாடகி சின்மயிதான் டப்பிங் குரல் கொடுத்து வந்தார். ஆனால் சின்மயி சமீபத்தில் சமந்தாவுக்கு இனி டப்பிங் கொடுக்க போவதில்லை என அறிவித்தார். இந்நிலையில் நடிகையர் திலகம் படத்தின் தெலுங்கு பதிப்பாக மகாநதி வெளியானது. இப்படத்தில் சமந்தா தன்னுடைய சொந்த குரலில் பேசி இருப்பார். ஆனால் சமந்தாவின் சொந்த குரல் ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை என்று கூறப்படுகிறது.
இருப்பினும் சமந்தா யசோதா திரைப்படத்தில் தன்னுடைய சொந்த குரலில் டப்பிங் கொடுக்க விரும்புகிறார். ஆனால் படக்குழுவினர் அதற்கு மறுப்பு தெரிவித்து வேறு ஒருவரை வைத்து டப்பிங் கொடுக்குமாறு வலியுறுத்துகின்றனர். ஒருவேளை சமந்தா டப்பிங் கொடுத்தால் அது படத்துக்கு மிகப்பெரிய மைனஸ் பாயிண்டாக அமைந்துவிடும் என படக் குழுவினர் அஞ்சுகின்றனர். இதன் காரணமாக பட குழு மற்றும் சமந்தாவுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த மோதலின் காரணமாக தான் யசோதா படம் வெளியாவதற்கு தாமதமாவதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.