மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று இன்று எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி காண்பது கடினம் தான். ருசியான உணவுகள் உண்டு மகிழ்வீர்கள். சுகம் என்பது தேடவேண்டிய ஒன்றாகத்தான் இன்று இருக்கும். உடல்நிலையில் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். தனலாபம் கிடைப்பதில் கொஞ்சம் காலதாமதம் ஏற்படும். எதிர்ப்புகள் ஓரளவு விலகி செல்லும் பயணத்தின் மூலம் லாபம் கிடைக்கும்.
நண்பர்களால் சில உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். பணவரவு ஓரளவு தான் எதிர்பார்த்தபடி இருக்கும். இன்று விரும்பிய பொருட்களை வாங்க எடுக்கும் முயற்சிகளுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.
கூடுமானவரை இன்று பொறுமையாகவே செயல்படுவது ரொம்ப நல்லது யாரிடமும் தயவுசெய்து பண கடன் மட்டும் கேட்டு வாங்காதீர்கள் ஒரு நாள் மட்டும் பொறுமையாகவே இருங்கள். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். இருப்பதை வைத்துக் கொண்டு சிறப்புடன் வாழ்வதை ரொம்ப மேல் இன்று மாணவச் செல்வங்களுக்கு கடினமாக உழைத்து தான் பாடங்களை படிக்க வேண்டி இருக்கும் படித்த பாடத்தை எழுதி பாருங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டும் இல்லை இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் பச்சை நிறம்