Categories
சினிமா தமிழ் சினிமா

என்னை மிரட்டினார்… பிரியா பவானி சங்கருக்கு மீம்ஸ் போட்ட இயக்குனர்..!!

குருதி ஆட்டம் படத்தின் இயக்குனர் ஸ்ரீ கணேஷ், நடிகை பிரியா பவானி சங்கர் தன்னை மிரட்டி கேட்டு கொண்டதால் மீம்ஸ்  போட்டதாக தெரிவித்துள்ளார்.

இயக்குனர் மிஷ்கினிடம் துணை இயக்குனராக ஸ்ரீ கணேஷ் பணியாற்றி, அதன்பின்  8 தோட்டாக்கள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்தப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து இயக்குனர் ஸ்ரீ கணேஷ் அடுத்ததாக அதர்வா நடிக்கும் ‘குருதி ஆட்டம்’ படத்தை இயக்கி வருகின்றார்.  இதில் அதர்வாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.

Image result for Director Sri Ganesh .

இயக்குனர் ஸ்ரீ கணேஷ் படத்தை இயக்குவது மட்டுமில்லாமல் மீம்ஸும் போடுவாராம். மீம்ஸ் போடுவதிலும் கணேஷுக்கு ஆர்வம் அதிகமாம்.

Image may contain: 1 person, smiling

இதனால் எனக்கும் ஒரு மீம் பண்ணுங்க என்று எங்கள் ஹீரோயின்  நடிகை பிரியா பவானி சங்கர் தன்னை மிரட்டி கேட்டு கொண்டதாகவும், இதற்காக ஒரு மீம்மை தயார் செய்து, இயக்குனர் ஸ்ரீ கணேஷ் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பிரியா பவானி சங்கர் நடித்த மாஃபியா திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக அவர் அந்த மீம்மை உருவாக்கியிருக்கிறார். நடிகை பிரியா பவானி சங்கர் ‘மேயாத மான்’ படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களிடையே  பிரபலமானார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

Image

அதன் பின் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்களும் பிரியாவுக்கு ஹிட் படங்களாக அமைந்தன. தொடக்கத்தில் பிரியா பவானி சங்கர் பிரபல தனியார் தொலைக்காட்சியான புதிய தலைமுறை நியூஸ் சேனலில் செய்தி வாசிப்பாளராகவும், சீரியல் நடிகையாகவும்  இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.facebook.com/sriganesh89/posts/2924966700897996

Categories

Tech |