கொரோனாவால் மாணவர்களிடையே ஏற்பட்ட கற்றல் இடைவெளியை குறைப்பதற்காக தமிழக அரசு எண்ணும் எழுத்தும் திட்டத்தை தொடங்கியது. இதன் முக்கிய நோக்கம் என்னவென்றால் 2025 ஆம் வருடத்திற்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை பெற வேண்டும் என்பதேயாகும். அதன்படி தமிழ்நாட்டில் உள்ள ஒன்று மற்றும் இரண்டு, மூன்றாம் வகுப்புகளில் தமிழ் ஆங்கிலம், கணக்கு பாடங்கள் சூழ்நிலையில் பாட கருத்துகளுடன் ஒருங்கிணைந்து கற்பிக்கப்படும். ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி அளிக்கப்பட்டதற்கான கையேடுகளும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் இந்த பயிற்சி போது அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் பாடலுக்கு ஏற்றவாறு நடனமாடும் வீடியோ பள்ளிக்கல்வித்துறை தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அரசு பள்ளி ஆசிரியை மிக உற்சாகமாக நடனம் ஆடுவதை பலரும் பாராட்டி வருகிறார்கள். இது போன்ற ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நல்ல முறையிலும் எளிமையான முறையில் பாடங்களை கற்றுக் கொடுப்பார்கள் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.