செவ்வந்தி என்ற தொடரில் நடித்து வரும் திவ்யாவும் செல்லம்மா தொடரில் நடித்து வரும் அர்னவும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு திவ்யா தான் கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் அறிவித்த நிலையில், அர்னவ்வுக்கும் திவ்யாவுக்கும் இடையே திடீரென பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையின் போது நடிகை திவ்யாவை அர்னவ் அடித்து துன்புறுத்தி கருவை கலைக்க பார்த்ததாக அவர் பரபரப்பு வீடியோவை வெளியிட்டு இருந்தார். இதுகுறித்து நடிகை திவ்யா காவல் நிலையத்திலும், மகளிர் ஆணையத்திலும் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அர்னவ்வை நேற்று படப்பிடிப்பு தளத்தில் வைத்து அதிரடியாக கைது செய்தனர்.
இதனையடுத்து நீதிமன்றத்தில் அர்னவ்வை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்குமாறு உத்தரவிட்டதால் புழல் சிறையில் தற்போது அவர் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் திவ்யாவின் வழக்கறிஞரிடம் மலேசியாவை சேர்ந்த திருநங்கை ஒருவர் பேசும் ஆடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அர்னவ் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக தன்னுடன் பழகி வந்ததாகவும், அந்த சமயத்தில் என்னை ஒரு மாலில் வைத்து அடித்து துன்புறுத்தியதாகவும் கூறியுள்ளார். மேலும் என்னுடன் பழகி வரும்போது வேறொரு பெண்ணுடனும் தொடர்பு வைத்திருந்ததாகவும் பரபரப்பு தகவல்களை கூறியுள்ளார்.